\
தொகுதிக்குச் செல்லுங்கள்: எம்எல்ஏக்களுக்கு ஆறுக்குட்டி அறிவுறுத்தல்

தொகுதிக்குச் செல்லுங்கள்: எம்எல்ஏக்களுக்கு ஆறுக்குட்டி அறிவுறுத்தல்

தொகுதிக்குச் செல்லுங்கள்: எம்எல்ஏக்களுக்கு ஆறுக்குட்டி அறிவுறுத்தல்
Published on

எம்எல்ஏக்கள் அனைவரும் அவர்கள் சொந்த தொகுதிக்கு செல்ல வேண்டும் என்று அதிமுக எம்.எல்.ஏ ஆறுக்குட்டி அறிவுறுத்தியுள்ளார்.

முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள எம்.எல்.ஏ ஆறுக்குட்டி செய்தியாளர்களின் சந்திப்பில், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் மக்கள் விருப்பப்படி செயல்பட வேண்டும். அவரவர் தொகுதிக்கு செல்ல வேண்டும். அந்த தொகுதியில் உள்ள மக்கள் ஆதரவு கொடுத்தால் நிச்சயமாக யாரை முதலமைச்சராக அறிவிக்கின்றார்களோ நானும் அதற்கு தயாராகயிருக்கின்றேன் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், எம்எல்ஏக்களை ஏன் தொடர்பு கொள்ள முடியவில்லை? என்றும் அவர்கள் ஏன் வெளியே வர மறுக்கிறார்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com