‘மனித உரிமை, மாநில உரிமை, ஜனநாயக உரிமை’ - ஸ்டாலின் ட்வீட்

‘மனித உரிமை, மாநில உரிமை, ஜனநாயக உரிமை’ - ஸ்டாலின் ட்வீட்

‘மனித உரிமை, மாநில உரிமை, ஜனநாயக உரிமை’ - ஸ்டாலின் ட்வீட்
Published on

நாட்டின் 73ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

நாட்டின் 73ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

அதில், “அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறுவதற்காக ஆதிக்கத்தை எதிர்த்து நின்று போராடி வென்ற தியாகிகளை இந்திய சுதந்திர நாளில் போற்றுவோம். அவர்களின் வழியில் கருத்துரிமை, மனித உரிமை, மாநில உரிமை, ஜனநாயக உரிமை காக்க அறவழியில் அயராது பாடுபடுவோம்” என வாழ்த்து தெரிவித்துள்ளார். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com