\
வாஜ்பாய் விரைவில் குணமடைய ஸ்டாலின் வாழ்த்து

வாஜ்பாய் விரைவில் குணமடைய ஸ்டாலின் வாழ்த்து

வாஜ்பாய் விரைவில் குணமடைய ஸ்டாலின் வாழ்த்து
Published on

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் விரைவில் குணமடைய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான வாஜ்பாய் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக சிறுநீரக தொற்று காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை தொடர்ச்சியாக கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. வாஜ்பாய் விரைவில் நலம்பெற அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் வாஜ்பாய் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “ வாஜ்பாய் உடல்நிலை குறித்து வெளியான செய்தியை கேட்டு மிகவும் கவலையடைந்தேன். எங்களுடைய எண்ணங்கள் அனைத்தும் வாஜ்பாயின் குடும்ப உறவினர்கள் மற்றும் நண்பர்களை சுற்றியே உள்ளன. அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com