தமிழ்நாடு
சட்டப்பேரவையில் ஸ்டாலின் கொண்டுவரவுள்ள 9 தீர்மானங்கள்
சட்டப்பேரவையில் ஸ்டாலின் கொண்டுவரவுள்ள 9 தீர்மானங்கள்
நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் திமுக தலைவர் ஸ்டாலின் 9 தீர்மானங்களை கொண்டுவரவுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி மாதத்திற்கு பின்னர் இன்று தொடங்கியது. இன்று முதல் நாள் என்பதால் மறைந்த எம்.எல்.ஏக்களுக்கு இரங்கல் தெரிவித்ததுடன் கூட்டத்தொடர் முடிவுபெற்றது. இதையடுத்து ஜூலை ஒன்றாம் தேதி மறுபடியும் கூட்டத்தொடர் தொடங்குகிறது. அன்றைய தினம் திமுக சார்பில் கொண்டுவரப்பட இருந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
இருப்பினும் திமுக சார்பில் 9 தீர்மானங்கள் கொண்டுவரப்படும் என அக்கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று சபாநாயகர் தனபாலிடம் மனு கொடுத்துள்ளார். அதன்படி,
- குடிநீர் பிரச்சனை
- மத்திய அரசின்
- மும்மொழி கொள்கை
- மாணவர்கள் கல்வி கடன்
- தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிப்பது
- உயர் மின் அழுத்த கோபுரங்கள் அமைக்கும் பிரச்னை
- ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை எதிர்ப்பு
- விவசாய கடன் தள்ளுபடி
- ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட தீர்மானங்கள் கொண்டுவரப்படவுள்ளன.
மேலும் குடிநீர் பற்றாக்குறை தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பும் கொண்டுவரப்படவுள்ளது.