அரசாங்கம் முறையாக செயல்பட வேண்டும்; அல்லது தி.மு.க. செயல்பட வைக்கும் - மு.க.ஸ்டாலின்

அரசாங்கம் முறையாக செயல்பட வேண்டும்; அல்லது தி.மு.க. செயல்பட வைக்கும் - மு.க.ஸ்டாலின்

அரசாங்கம் முறையாக செயல்பட வேண்டும்; அல்லது தி.மு.க. செயல்பட வைக்கும் - மு.க.ஸ்டாலின்
Published on

ஆக்கப்பூர்வமாக அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க தி.மு.க. என்றைக்கும் தயாராக இருக்கிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ்க்கு எதிரான தமிழக அரசின் நடவடிக்கை இந்தியாவுக்கே முன்னுதாரணமாக திகழும் சூழலில், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபடுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டினார். இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

''அரசாங்கம் ஒழுங்காக முறையாக, மக்களுக்காகச் செயல்பட வேண்டும். அல்லது அரசாங்கத்தை தி.மு.க. செயல்பட வைக்கும். பேரிடர் காலம் என்பது திசைத் திருப்பல் ஏதுமின்றி மக்களுக்காகப் பணியாற்றும் களம். ஆகவே, கொரோனா நோய்த் தடுப்புப் பணிகளில் அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க தி.மு.க. என்றைக்கும் தயாராக இருக்கிறது.

 எனவே, பிரதான எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தை கொச்சைப்படுத்தும் மலிவான மனவோட்டத்தையும், அநாகரிகமான அரசியலையும் கைவிட்டு - நெருக்கடிகள் மிகுந்த இந்த நேரத்தில் தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளையும் அரவணைத்துச் சென்று - மனித குலமே நடுங்கி நிற்கும் இந்தப் பேரிடரிலிருந்து தமிழக மக்களை மீட்டிட பொறுப்புள்ள முதலமைச்சராக, கடமை உணர்வுடன் செயல்பட முன்வர வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com