பெண்ணின் கண்ணியம் மிதிக்கப்படுவதை பொறுக்க முடியாது: மு.க.ஸ்டாலின்

பெண்ணின் கண்ணியம் மிதிக்கப்படுவதை பொறுக்க முடியாது: மு.க.ஸ்டாலின்

பெண்ணின் கண்ணியம் மிதிக்கப்படுவதை பொறுக்க முடியாது: மு.க.ஸ்டாலின்
Published on

பினாமி ஆட்சியில் காவல்துறை அதிகாரிகளால் மனித உரிமைகளும், பெண்களின் கண்ணியமும் காலில் போட்டு மிதிக்கப்படுவதை பொறுத்துக் கொள்ள முடியாது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சாமளாபுரத்தில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீதும், பொது மக்கள் மீதும் கண்மூடித்தனமாக தடியடி நடத்திய காவல்துறைக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

மதுக்கடைகளை படிப்படியாக மூடுவோம் என்று தேர்தலில் வாக்குறுதி கொடுத்து விட்டு மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் திறக்கப்படும் மதுக்கடைகளை எதிர்த்தால் காவல்துறையை வைத்து அராஜகத்தை கட்டவிழ்த்து விடும் அதிமுக அரசின் இரட்டை வேடம் வேதனைக்குரியது என குறிப்பட்டுள்ளார்.

மதுபானக் கடைகள் திறக்கப்படுவதை எதிர்க்கும் மக்கள் மீது காவல்துறையினர் கடுமையாக தாக்குவதும், அராஜகத்தின் உச்சிக்குச் சென்று பெண்களையே காவல்துறை அதிகாரியே கை நீட்டி தாக்குவதும் காட்டுமிராண்டி சமுதாயத்தில் வாழ்கிறோமா என்ற அச்சத்தையே ஏற்படுத்தியிருக்கிறது என கூறியுள்ளார்.

மனித உரிமைகளும், பெண்ணின் கண்ணியமும், சட்டத்தின் ஆட்சியும் பினாமி ஆட்சியில் காவல்துறை அதிகாரிகளால் காலில் போட்டு மிதிக்கப்படுவதை பொறுத்துக் கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார். மதுக் கடைக்கு எதிராக போராடிய பெண்ணை பொது இடத்தில் கை நீட்டி அடித்த காவல்துறை கூடுதல் டி.எஸ்.பி. பாண்டியராஜனை உடனடியாக தற்காலிக பணி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மக்களின் உணர்வுகளுக்கும், ஜனநாயக ரீதியான போராட்டங்களுக்கும் மதிப்பளித்து பொது இடங்களில் மதுக்கடைகளை திறப்பதை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக கைவிட வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com