அயலகத் தமிழர் தினம் 2025புதிய தலைமுறை
தமிழ்நாடு
அயலகத் தமிழர்களுக்கு ரூ.10 கோடியில் சிறப்பு திட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு நாட்டுப்புற கலைகளை பயிற்றுவிக்கும் சிறப்பு திட்டத்திற்கு 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்குவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு நாட்டுப்புற கலைகளை பயிற்றுவிக்கும் சிறப்பு திட்டத்திற்கு 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்குவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அயலகத் தமிழர் தினம் 2025
அயலகத் தமிழர் தினத்தை முன்னிட்டு, சென்னை நந்தம்பாக்கத்தில் அயலகத் தமிழர் தினவிழா இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு விருதுகளை வழங்கிப் பேசிய முதலமைச்சர், அயலகத் தமிழர்களால் பாலைவனம் சோலைவனமாகியதாகத் தெரிவித்தார்.
எந்த வெளிநாட்டுக்குச் சென்றாலும் தாயகத்தில் இருக்கும் உணர்வை அயலகத் தமிழர்கள் கொடுத்ததாகக் கூறிய முதலமைச்சர், எந்த தூரமும் தமிழில் இருந்து நம்மை தூரப்படுத்தி விடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார். மேலும் வேர்களைத் தேடி திட்டம் திராவிட மாடல் அரசுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி எனக்கூறிய முதலமைச்சர், சொல் அல்ல செயல்தான் தனது ஸ்டைல் எனத் தெரிவித்தார்.