பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின்pt web
தமிழ்நாடு
"தமிழ்நாட்டில் எந்தமக்களுக்கு பிரதமர் நிதி அளித்தார்?; அப்பட்டமாக பொய் கூறுகிறார்"-முதல்வர் ஸ்டாலின்
மாநில அரசுக்கு நிதி தராமல் நேரடியாக மக்களுக்கு நிதி வழங்கி வருவதாக பிரதமர் மோடி அப்பட்டமான பொய் பேசியிருப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
மாநில அரசுக்கு நிதி தராமல் நேரடியாக மக்களுக்கு நிதி வழங்கி வருவதாக பிரதமர் மோடி அப்பட்டமான பொய் பேசியிருப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், "தமிழ்நாட்டில் எந்த மக்களுக்கு பிரதமர் மோடி நிதி அளித்தார்? 2 மாபெரும் இயற்கை பேரிடரில் பாதிக்கப்பட்ட 8 மாவட்ட மக்களுக்கு மத்திய அரசு செய்தது.
பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின்pt web
ஒரு ரூபாய் என்றாலும் அது மக்களிடம் முறையாக சேர வேண்டும் என நினைத்து நலத்திட்டங்களை தீட்டப்படுகிறது. மேலும், மத்திய அரசின் ஓரவஞ்சனையால் தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நிதியும் குறைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் இருந்து நிதி வராதபோதும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 3 ஆயிரத்து 406 கோடி ரூபாயை தமிழக அரசு வழங்கி இருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.