அண்ணா ஸ்டைலில் முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் டயலாக்.. விண்ணை பிளந்த கரகோஷம்!

“கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை துவக்கி வைக்க இங்கு வந்துள்ளேன். அதை துவக்கி வைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது என் வாழ்நாளில் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பேராக நான் நினைக்கிறேன்”

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை தொடக்கவிழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், பேரறிஞர் அண்ணாவின் வார்த்தைகளான “அண்ணாதுரை கொண்டு வந்தவற்றை எல்லாம் மாற்றவேண்டும் என்று எண்ணும்போதே, `மக்கள் வெகுண்டெழுவார்களே என்கிற அச்சமும் கூடவே எழும் இல்லையா?’.., அந்த அச்சம் இருக்கிற வரையில் இங்கு யார் ஆண்டாலும், அண்ணாதுரைதான் இந்த நாட்டை ஆள்கிறான் என்று பொருள்’’- என்பதை தனக்கு ஏற்றார் போல் பேசினார்.

அதன்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ``இந்த மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தை தொடங்கிவைத்தது வாழ்நாளில் எனக்குக் கிடைத்த பெருமை, பாக்கியம். மகளிர் உரிமைத் தொகையை பெண்கள் பெறும் காலம்வரை ஸ்டாலினே ஆள்வதாக அர்த்தம்’’

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com