\
''கரடி பொம்மை என்ன விலை நகைச்சுவைபோல உள்ளது'' - அமித் ஷாவுக்கு ஸ்டாலின் பதில்

''கரடி பொம்மை என்ன விலை நகைச்சுவைபோல உள்ளது'' - அமித் ஷாவுக்கு ஸ்டாலின் பதில்

''கரடி பொம்மை என்ன விலை நகைச்சுவைபோல உள்ளது'' - அமித் ஷாவுக்கு ஸ்டாலின் பதில்
Published on

வாரிசு அரசியலை பாஜக ஒழிக்கும் என பாஜக கூறியதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்

இரண்டு நாள் பயணமாக நேற்று தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் நேற்று மேடையில் பேசினார். அப்போது வாரிசு அரசியலை பாஜக ஒழிக்கும் என திமுகவை குறிபிட்டு பேசினார். அது குறித்து தற்போது பதிலளித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், வாரிசு அரசியல் குறித்து பாஜக பேசுவது, கண்ணாடியை பார்த்து கரடி பொம்மை என்ன விலை என்று கேட்ட நகைச்சுவையைப் போல உள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும், அரசு கஜானாவை சுரண்டிய இரட்டையர்களை பக்கத்தில் வைத்துக்கொண்டு எதிர்க்கட்சிகள் மீது ஊழல் புகாரா? என்றும் எத்தனை வித்தைகள் செய்தாலும் 2021 தேர்தலில் மக்கள் பலமான அடியை வழங்குவார்கள் என்றும் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com