\
MK Stalin Says KN Nehru Raid Targets Trichy East Bypoll
விஜய் - ஸ்டாலின்ANI

”கே.என். நேரு வீட்டில் சோதனை; திருச்சி கிழக்கு இடைத் தேர்தலுக்காகவே” - மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு

முன்னாள் அமைச்சர் கே.என் நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வரும் நிலையில், திருச்சி கிழக்கு இடைத்தேர்தலுக்கான ரீல்ஸ் வீடியோக்களை தயாரிக்கவே இந்த ரெய்டு நடத்தப்படுகிறது என மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Published on: 

திமுக ஆட்சிக்காலத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக கே.என். நேரு இருந்தபோது, சுமார் 634 கோடி மதிப்பிலான ஒப்பந்த (டெண்டர்) முறைகேடுகள், சாலை உள்ளிட்ட கட்டுமான பணிகளுக்கு கமிஷன் பெற்றது மற்றும் லஞ்சம் வாங்கிக்கொண்டு  2,538 அரசுப் பணியிட பணிநியமனங்கள் செய்தது போன்ற புகார்கள் எழுந்தன. இந்த வழக்கு தொடர்பாக, வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து இன்று காலை 7 மணி முதல் திருச்சியில் உள்ள கே.என். நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

Stalin
StalinX

இந்தச்சூழலில் தான், திருச்சி கிழக்கு இடைத்தேர்தலுக்கான ரீல்ஸ் வீடியோக்களை தயாரிக்கவே இந்த ரெய்டு நடத்தப்படுவதற்காக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”பெண்கள், குழந்தைகள், முதியோர் என யாருமே பாதுகாப்பாக இல்லாத மாநிலமாகத் தமிழ்நாட்டை மாற்றிவிட்ட முதலமைச்சர், மக்களின் கவனத்தையும் - ஊடகங்களின் Breaking News-ஐயும் திசைதிருப்ப Roadshow நடத்தலாமா? Raidshow நடத்தலாமா? எனச் சிந்தித்துக் கொண்டிருக்கிறார். ஊழல் பெருச்சாளிகளை எல்லாம் பேரக் குதிரைகளாக மாற்றி தன் கட்சியில் இணைத்துக் கொண்டிருக்கும் தவெக எனும் “TN Branch Washing Machine”, திமுக ஆட்சியின் முன்னாள் அமைச்சர்களை மட்டும் குறிவைத்து நடத்திக் கொண்டிருக்கும் “Vettri Vendetta Politics” திட்டம், வழக்கம் போல் சட்டத்தின் முன் தோற்று, மக்கள் முன் தலைகுனிந்து நிற்கும்!

திருச்சி கிழக்கு இடைத்தேர்தலுக்கான ரீல்ஸ் விடியோக்களைத் தயாரிக்கவும் - முதலமைச்சர் மேடையில் punch dialogue என்ற பெயரில் பல modulation-இல் காட்டுக்கத்து கத்தவும் நடத்தப்படும் இந்த ரெய்டுகளைக் கண்டு தி.மு.க.வின் கடைக்கோடிக் தொண்டரின் கால் நகம் கூட அஞ்சாது! சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, துருப்பிடித்துவிட்ட நிர்வாகம், வாட்டி வதைக்கும் விலைவாசி உயர்வு என மக்களை பாதித்துக் கொண்டிருக்கும் இந்த த.வெ.க. ஆட்சியைக் கண்டு, தமிழ்நாடு மட்டுமல்ல இந்திய நாடே எள்ளி நகைக்கிறது. இதை எல்லாம் மறைக்க, திமுகவினருக்கு வாய்ப்பூட்டு போடலாம் என்று நினைக்கிறீர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

MK Stalin Says KN Nehru Raid Targets Trichy East Bypoll
ரூ. 634 கோடி மோசடி புகார்.. கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com