நான் தாக்கப்பட்டேன்: ஸ்டாலின் குற்றச்சாட்டு

நான் தாக்கப்பட்டேன்: ஸ்டாலின் குற்றச்சாட்டு

நான் தாக்கப்பட்டேன்: ஸ்டாலின் குற்றச்சாட்டு
Published on

பேரவையில் எங்களை குண்டுக்கட்டாகத் தூக்கி, அடித்து உதைத்து சட்டைகளை கிழித்தனர் திமுக செயல்தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

நம்பிக்கை வாக்கெடுப்புக்காக இன்று கூடிய தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் தொடங்கியது முதலே ரகசிய வாக்கெடுப்பு நடத்தக் கோரி திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும், ஓபிஎஸ் அணியினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். தொடர் அமளியால் சட்டப்பேரவை அடுத்தடுத்து 2 முறை ஒத்திவைக்கப்பட்டது. பேரவையின் மாண்பைக் குலைக்கும் வகையில் செயல்பட்டதாக திமுக உறுப்பினர்களை சபாநாயகர் வெளியேற்ற உத்தரவிட்டார். ஆனால் வெளியேற மறுத்து திமுக உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து திமுக உறுப்பினர்களை குண்டுகட்டாக தூக்கி அவைக்காவலர்கள் வெளியேற்றினர்.

சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், தங்களை குண்டுக்கட்டாகத் தூக்கி அடித்து உதைத்து சட்டைகளைக் கிழித்ததாக குற்றம்சாட்டினார். மேலும், ரகசிய வாக்கெடுப்புக்கு சபாநாயகர் இடமளிக்கவில்லை என்று குறிப்பிட்ட ஸ்டாலின், சட்டப்பேரவையில் திமுக அறப்போராட்டம் நடத்தினோம் என்றும் தெரிவித்தார். சட்டப்பேரவையில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக ஆளுநரிடம் நேரடியாக முறையிட இருப்பதாகவும் ஸ்டாலின் கூறினார். சபாநாயகர் தனபால் வேண்டுமென்றே சட்டையைக் கிழித்துக் கொண்டதாகவும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com