7 பேரை விடுவிக்க ஆளுநர் உடனடி ஆணை பிறப்பிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்

7 பேரை விடுவிக்க ஆளுநர் உடனடி ஆணை பிறப்பிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்

7 பேரை விடுவிக்க ஆளுநர் உடனடி ஆணை பிறப்பிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்
Published on

7 பேரை விடுதலை செய்ய தமிழக ஆளுநர் உடனடியாக ஆணை பிறப்பிக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், தமிழக அமைச்சரவைக்‌ கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. சுமார் 2 மணி நேரம் நடந்த இந்தக் கூட்டத்தில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுவிக்கும் விவகாரத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், நளினி ஆகிய 7 பேரையும் விடுவிக்க ஆளுநருக்கு பரிந்துரை செய்ய அமைச்சரவை முடிவு செய்தது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 161-ன் கீழ், 7 பேரையும் முன்விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரைக்க அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது. 

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஸ்டாலின், “திரு.ராஜீவ்காந்தி அவர்களின் கொலை வழக்கில், 27 வருடங்களாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டுமென்ற தமிழக அமைச்சரவை முடிவினை ஏற்று, அனைத்து தமிழர்களும் மகிழ்ச்சியடையும் வகையில் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் உடனடியாக விடுதலை செய்யும் ஆணையை பிறப்பிக்க வேண்டும்!” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com