மில்கா சிங் வாழ்வு இளம் இந்தியர்களைச் சாதிக்கத் தூண்டட்டும் - மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி

மில்கா சிங் வாழ்வு இளம் இந்தியர்களைச் சாதிக்கத் தூண்டட்டும் - மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி

மில்கா சிங் வாழ்வு இளம் இந்தியர்களைச் சாதிக்கத் தூண்டட்டும் - மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி
Published on
'சோதனைகளை வென்று சாதனை படைத்த மில்கா சிங் வாழ்வு மேலும் பல இளம் இந்தியர்களைச் சாதிக்கத் தூண்டட்டும்' என புகழாரம் சூட்டியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் (91), கடந்த மாதம் கொரோனா தொற்றால் மொகாலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருந்ததால் குடும்பத்தினர் கோரிக்கையை ஏற்று வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த மாத தொடக்கத்தில் மில்கா சிங்குக்கு திடீரென ஆக்சிஜன் அளவு குறைந்ததால் சண்டிகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த மில்கா சிங் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் குறிப்பில், இந்தியாவின் தலைசிறந்த தடகள வீரர்களில் ஒருவரும் 'பறக்கும் சீக்கியர்' என்று அழைக்கப்படுபவருமான மில்கா சிங் அவர்களின் மறைவுச்செய்தி அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். சோதனைகளை வென்று சாதனை படைத்த அவரது வாழ்வு மேலும் பல இளம் இந்தியர்களைச் சாதிக்கத் தூண்டட்டும்'' என கூறியுள்ளார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com