\
டிசர்ட்டில் அழகிரி,  ஸ்டாலினுடன் செல்ஃபி!

டிசர்ட்டில் அழகிரி, ஸ்டாலினுடன் செல்ஃபி!

டிசர்ட்டில் அழகிரி, ஸ்டாலினுடன் செல்ஃபி!
Published on: 

மதுரையில் திமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து சாலையில் நடந்து சென்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மக்களிடம் வாக்குசேகரித்தார். 

மதுரை மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து, மாட்டுத்தாவணி மார்க்கெட் பகுதியில் நடந்து சென்று ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.

மார்க்கெட்க்கு வந்திருந்த மக்களை சந்தித்து சு.வெங்கடேசனுக்கு ஆதரவு திரட்டிய அவர், வணிகர்கள், மக்களிடம் கலந்துரையாடினார்.  அங்கிருந்த கடை ஒன்றில், வேட்பாளருடன் சேர்ந்து ஸ்டாலின் டீ குடித்தார். 

மு.க.ஸ்டாலினை நேரில் பார்த்த  இளைஞர்கள், சிறுவர்கள் என ஏராளமானோர் ஸ்டாலினுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். அதில் ஒரு இளைஞர் எடுத்துக்கொண்ட செல்ஃபி இணையத்தில் பரவி வருகிறது.  மு.க.அழகிரியின் படம் பொறிக்கப்பட்ட டிசர்ட் அணிந்திருந்த அந்த இளைஞர் ஆர்வமாக ஸ்டாலினுடன் செல்ஃபி எடுத்துள்ளார்.

டிசர்ட்டில் அழகிரி, செல்ஃபியில் ஸ்டாலின் என பலரும் அந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com