தமிழ்நாடு
மனிதச் சங்கிலிப் போராட்டத்திற்கு மாணவர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு
மனிதச் சங்கிலிப் போராட்டத்திற்கு மாணவர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி வரும் 27-ம் தேதி நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்தில் மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியறுத்தி உள்ளார்.
மாநில பாடத்தில் படித்தவர்களுக்கு மருத்துவ படிப்பில் 85 சதவிகித உள்ஒதுக்கீடு என்ற அரசாணையை வெளியிட்டு பொய்யான நம்பிக்கையை தமிழக அரசு ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டினார். மாணவர்கள் தங்களின் எதிர்காலத்தை மீட்க, மனித சங்கிலி போராட்டத்தில் இரும்பு கரங்களாக இணைய வேண்டும் என அழைப்பு அவர் விடுத்துள்ளார்.
இதனிடையே, நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக நடத்தும் மனித சங்கிலி போராட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மனித நேய மக்கள் கட்சி ஆகியவை ஆதரவு அளித்துள்ளன.