\
மதுரை பல்கலை துணைவேந்தரை நீக்கவேண்டும் : மு.க.ஸ்டாலின்

மதுரை பல்கலை துணைவேந்தரை நீக்கவேண்டும் : மு.க.ஸ்டாலின்

மதுரை பல்கலை துணைவேந்தரை நீக்கவேண்டும் : மு.க.ஸ்டாலின்
Published on

மதுரை காமராஜ் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லதுரையை உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி ஆளுநர் உடனடியாக பதவிநீக்க வேண்டும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் மதுரை காமராஜ் பல்கலைக்கழக துணை வேந்தராக செல்லதுரை நியமிக்கப்பட்டதை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து கடந்த 14ம் தேதி தீர்ப்பளித்ததை சுட்டிக்காட்டியுள்ளார். உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்பில் இருந்து செல்லதுரையை உடனடியாக ஆளுநர் டிஸ்மிஸ் செய்யவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். 

மதுரை காமராஜ் பல்கலைக்கழக துணை வேந்தர் நியமிப்பதற்காக அமைக்கப்படும் தேடுதல் குழுவிடம் செல்லதுரை மீண்டும் விண்ணப்பம் அளித்தால், அதை நிராகரிக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். செல்லதுரையின் துணைவேந்தர் பதவிக்காலத்தில் நடைபெற்றுள்ள பல்கலைக்கழகத்தின் அனைத்து முறைகேடுகளையும் முறையாக விசாரிக்க, சிறப்பு விசாரணைக்குழுவை உயர்கல்வித்துறைச் செயலாளர் உடனே அமைக்கவேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com