ஊழல் பற்றி பேசாமல் ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.. மு.க.ஸ்டாலின்
தமிழக ஆளுநர் ஊழல் பற்றி பொதுமேடைகளில் பேசுவது தமிழக மக்களுக்கு எவ்வித பலனையும் கொடுக்காது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊழல் புகார்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் ஆளுநர், துணை வேந்தர்கள் நியமனம் பற்றி குறிப்பாக தேர்ந்தெடுத்து பேசுவது மட்டும் ஆச்சர்யமாக இருக்கிறது எனக் கூறியுள்ளார்.
அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் ஆளுநர், ஊழல் பற்றி பொதுமேடைகளில் பேசுவது தமிழக மக்களுக்கு எவ்வித பலனையும் கொடுக்காது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். துணை வேந்தர்கள் நியமனத்தில் ஊழல் நடக்கிறது என்று ஆதாரபூர்வமாக பேசியிருக்கும் ஆளுநர், அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ஊழல் புகாருக்கு உள்ளானவர்களை ஆளுநர் உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.