\
மாநில தகவல் ஆணையர் தேர்வுக்குழு கூட்டம்: புறக்கணித்தார் ஸ்டாலின்

மாநில தகவல் ஆணையர் தேர்வுக்குழு கூட்டம்: புறக்கணித்தார் ஸ்டாலின்

மாநில தகவல் ஆணையர் தேர்வுக்குழு கூட்டம்: புறக்கணித்தார் ஸ்டாலின்
Published on

மாநில தலைமை தகவல் ஆணையர் நியமனத்திற்கான தேர்வுக்குழு கூட்டத்தை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் புறக்கணித்துள்ளார்.

இது தொடர்பாக பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அரசு செயலாளருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், மாநில தலைமைத் தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர்கள் நியமன தேர்வின் அணுகுமுறையில் பிழையிருப்பதால் தன்னால், தேர்வுக்குழு ஆலோசனைக் கூட்டத்தில் தன்னால் பங்கேற்க முடியாது என ஸ்டாலின் கூறியுள்ளார்.‌

இன்று நடைபெறும் கூட்டத்திற்கான விண்ணப்பங்கள் ஏற்கனவே பெறப்பட்டு, தேதியும் இறுதி செய்யப்பட்ட பிறகு, மீண்டும் கடந்த 21ஆம் தேதி வரை விண்ணப்பங்களை பெற்றிருப்பது வியப்பளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com