முக்கொம்பு அணையை முன்கூட்டியே சீரமைக்க தவறியது ஏன்?: மு.க.ஸ்டாலின்

முக்கொம்பு அணையை முன்கூட்டியே சீரமைக்க தவறியது ஏன்?: மு.க.ஸ்டாலின்
முக்கொம்பு அணையை முன்கூட்டியே சீரமைக்க தவறியது ஏன்?: மு.க.ஸ்டாலின்

திருச்சி முக்கொம்பு அணையில் மதகுகள் உடையும் என்பதை முன்கூட்டியே கணித்து சீரமைக்க தவறியது ஏன் என தமிழக அரசுக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், கொள்ளிடம் பாலம், முக்கொம்பு மேலணை என ஒவ்வொன்றாக உடைந்து வருவது அணைகள் பாதுகாப்பு விஷயத்தில் அரசின் அக்கறையின்மையையும் அலட்சியத்தையும் காட்டுவதாக குற்றம்சாட்டியுள்ளார். அணைகளின் பாதுகாப்பு குறித்து முன்கூட்டியே ஆய்வு செய்து கணித்திடத் தவறியது ஏன் என வினவியுள்ள ஸ்டாலின், இந்தப் பாதிப்புகளுக்கு அரசே முழுப் பொறுப்பேற்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள அணைகள் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள அனைத்து அணைகளின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து, முன்னெச்சரிக்கையாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள குழு ஒன்றை அமைக்க வேண்டும் என தெரிவித்துள்ள ஸ்டாலின், அக்குழுவின் பரிந்துரைகளை ஏற்று தமிழகத்தில் உள்ள அணைகளின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

திருச்சி கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உள்ள முக்கொம்பு அணையில் 8 மதகுகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட நிலையில் இன்று காலை மேலும் ஒரு மதகு உடைந்தது. சேதமடைந்த பகுதியை தற்காலிகமாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com