‘சந்திரசேகர் ராவுடன் மரியாதை நிமித்தமான சந்திப்பு’ - மு.க.ஸ்டாலின்

‘சந்திரசேகர் ராவுடன் மரியாதை நிமித்தமான சந்திப்பு’ - மு.க.ஸ்டாலின்

‘சந்திரசேகர் ராவுடன் மரியாதை நிமித்தமான சந்திப்பு’ - மு.க.ஸ்டாலின்
Published on

தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவை சந்தித்தது மரியாதை நிமிர்த்தமானது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஃபெடரல் ஃப்ரான்ட் என்ற பெயரில் மாநில கட்சிகளை ஒருங்கிணைப்பதற்காக கடந்த ஆண்டிலிருந்தே மாநிலக்கட்சிகளின் தலைவர்களை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் தொடர்ந்து சந்தித்து வருகிறார். கடந்தாண்டு மார்ச் மாதம் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்த சந்திரசேகர் ராவ், அடுத்து ஏப்ரலில் மதசார்பற்ற ஜனதா தள மூத்த தலைவர் தேவ கவுடாவை சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து இரண்டு வாரங்களில் சென்னை வந்த சந்திரசேகர் ராவ், அப்போது திமுக செயல் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலினுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இவ்வாறு, மாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, பிஜு ஜனதா தள தலைவர் நவீன் பட்நாயக், மேற்கு வங்க முதல்வர் மம்தா உள்ளிட்டோரை சந்தித்தார்.

மக்களவைத் தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கும் இந்நேரத்தில் சந்திரசேகர ராவ் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை கடந்த வாரம் சந்தித்தார். அதைத்தொடர்ந்து இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பிற்கு பிறகு ஸ்டாலின் மற்றும் சந்திரசேகர் ராவ் இருவரும் செய்தியாளர்களை சந்திக்கவில்லை. இந்நிலையில் சந்திப்பு தொடர்பாக ஸ்டாலின் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவை மரியாதை நிமிர்த்தமாக சந்தித்ததாக குறிப்பிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com