கருணாநிதியின் சிந்தனைகளுக்கு ஓய்வில்லை: ஸ்டாலின் புகழாரம்

கருணாநிதியின் சிந்தனைகளுக்கு ஓய்வில்லை: ஸ்டாலின் புகழாரம்

கருணாநிதியின் சிந்தனைகளுக்கு ஓய்வில்லை: ஸ்டாலின் புகழாரம்
Published on

திமுக தலைவர் கருணாநிதியின் சிந்தனைகளுக்கும் செயல்பாடுகளுக்கும் ஓய்வே கிடையாது என்று கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். 

கருணாநிதியின் 94ஆவது பிறந்தநாள் மற்றும் சட்டப்பேரவை வைரவிழாவை முன்னிட்டு பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள ஸ்டாலின், உலகில் எங்கெல்லாம் தமிழர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் அவர்கள் உள்ளத்தால் கருணாநிதியை வாழ்த்துகிறார்கள் எனக் கூறியிருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் பிறந்த நாளன்று தொண்டர்களை நேரில் சந்திக்கும் கருணாநிதி, இம்முறை உடல்நிலை ஒத்துழைக்க மறுப்பதால் யாரையும் சந்திக்க இயலவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆனாலும், கருணாநிதியின் சிந்தனைகளுக்கும், செயல்பாடுகளுக்கும் ஓய்வு கிடையாது என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இத்தனை காலங்கள் மக்களுக்காக உழைத்த கருணாநிதியின் லட்சியங்கள் நிறைவேற உழைப்பதே அவருக்கு வழங்கக்கூடிய பிறந்த நாள் பரிசாகும் என்றும் ஸ்டாலின் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com