\
அமைச்சர் துரைக்கண்ணு மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்

அமைச்சர் துரைக்கண்ணு மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்

அமைச்சர் துரைக்கண்ணு மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்
Published on

அமைச்சர் துரைக்கண்ணு மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மூச்சுத்திணறல் காரணமாக கடந்த 13ஆம் தேதி சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துரைக்கண்ணுவுக்கு 90 சதவிகிதம் நுரையீரல் பாதிக்கப்பட்டிருந்ததாக மருத்துவமனை கூறியிருந்தது. உயிர் காக்கும் கருவிகள் உதவியுடன் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றிரவு இரவு 11.15 மணிக்கு அமைச்சர் துரைக்கண்ணுவின் உயிர் பிரிந்ததாக மருத்துவமனை அறிவித்தது. அமைச்சரின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அமைச்சர் துரைக்கண்ணு மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், வேளாண்துறை அமைச்சர் திரு.துரைக்கண்ணு மறைவெய்திய செய்தி கேட்டுத் துயருற்றேன். ஆழ்ந்த இரங்கல். பொதுவாழ்வில் உள்ள அனைவரும் சுய பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடித்திட வேண்டும். அமைச்சரை இழந்து வாடும் குடும்பத்தினர், சக அமைச்சர்கள், முதலமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கும் என் ஆறுதல் எனக் குறிப்பிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com