தமிழ்நாடு
சாதனை படைக்கும் விவேக்கை இயற்கை ஏன் அவசரமாக பறித்துக்கொண்டதோ? - மு.க. ஸ்டாலின் இரங்கல்
சாதனை படைக்கும் விவேக்கை இயற்கை ஏன் அவசரமாக பறித்துக்கொண்டதோ? - மு.க. ஸ்டாலின் இரங்கல்
நகைச்சுவையுடன் விழிப்புணர்வையும் மக்களுக்கு வழங்கியவர் நடிகர் விவேக் என்று இரங்கல் தெரிவித்துள்ளார் மு.க.ஸ்டாலின்.
நடிகர் விவேக் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ''மரம் நடுதல் போன்ற சூழலியல் சார்ந்த சமூகப் பணிகளிலும் ஈடுபடுத்திக் கொண்டவர் நடிகர் விவேக். நகைச்சுவையுடன் விழிப்புணர்வையும் மக்களுக்கு வழங்கியவர் அவர். பல சாதனையை நிறைவேற்றக்கூடிய ஆற்றல் படைத்தவரை இயற்கை அவசரமாக ஏன் பறித்துக்கொண்டதோ?'' என்று குறிப்பிட்டுள்ளார்.