\
நாளை காலை ஆளுநரை சந்திக்கிறார் மு.க ஸ்டாலின்

நாளை காலை ஆளுநரை சந்திக்கிறார் மு.க ஸ்டாலின்

நாளை காலை ஆளுநரை சந்திக்கிறார் மு.க ஸ்டாலின்
Published on

திமுக சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வாகியுள்ள மு.க ஸ்டாலின் நாளை காலை ஆளுநரை சந்திக்கிறார்.

தமிழகத்தில் ஆட்சியமைக்க நாளை ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்து உரிமை கோரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காலை 10 மணியளவில் ஆளுநருடன் நடைபெறும் சந்திப்பின்போது தனது அமைச்சரவை பட்டியலை ஸ்டாலின் வழங்குவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் திமுக சட்டமன்றக் கட்சித்தலைவராக மு.க ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நாளை ஆளுநரை சந்திக்கவிருக்கிறார் ஸ்டாலின்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com