”பெரியாரின் கொள்கையை தூக்கி பிடிக்கும் மகத்தான தலைவர் மு.க.ஸ்டாலின்”- எம்.பி ஆ.ராசா பேட்டி

”பெரியாரின் கொள்கையை தூக்கி பிடிக்கும் மகத்தான தலைவர் மு.க.ஸ்டாலின்”- எம்.பி ஆ.ராசா பேட்டி
”பெரியாரின் கொள்கையை தூக்கி பிடிக்கும் மகத்தான தலைவர் மு.க.ஸ்டாலின்”- எம்.பி ஆ.ராசா பேட்டி
"பெயர்களில் சாதி இல்லாததால் தமிழக எம்பிக்கள் தனித்து நிற்கிறோம். பெரியாரின் கொள்கை வாழவேண்டும். சாதிமறுப்பு திருமணங்கள் அதிகம் நடைபெற வேண்டும்” என பேசியுள்ளார் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா.
தந்தை பெரியார் திராவிட கழக மாவட்ட செயலாளர் குமரகுருபரனின் இல்ல சாதி மறுப்பு திருமணத்தை, நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா இன்று நடத்தி வைத்தார். பின்னர் பேசிய ஆ.ராசா, “பக்தி மனிதனை பக்குவப்படுத்துவதற்காக அல்ல. ஒரு இனம் வாழ்வதற்காக இந்து மதம் என்ற பெயரால் மிகப்பெரிய அரசியல் நடந்துகொண்டிருக்கிறது. கல்வி மற்றும் பொருளாதாரத்தில் அருந்ததியர் மற்றும் அடக்கப்பட்ட சமுதாயத்தினர் மேலே வரவேண்டும் என்ற எண்ணம் திமுகவிற்கு உண்டு. அந்தவகையில், முதல்வர் ஸ்டாலினை ‘பெரியாரியவாதியா, அண்ணாவாதியா, கலைஞர் போன்ற வீரியம் போல இருப்பாரா’ என்றெல்லாம் கேட்ட கருப்புச்சட்டைக்காரர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தினரையும் இன்றைக்கு வாயடைக்கும் வகையில் பெரியாரின் கொள்கையை தூக்கி பிடிக்கின்ற மகத்தான தலைவாராக ஸ்டாலின் இருக்கிறார்.
இந்த ஆட்சிக்காலம் பெரியார், அண்ணா, கலைஞர், அம்பேத்கர் கொள்கையை அதிகம் பரப்புவோம். மார்சீயத்தை தூக்கிபிடிப்போம். தமிழக எம்பிக்களின் பெயர்களில் சாதி இல்லாததால் தான் நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் தனித்து நிற்கிறோம்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com