\
முரசொலி பவள விழா: கருணாநிதியிடம் அழைப்பிதழ் வழங்கினார் ஸ்டாலின்

முரசொலி பவள விழா: கருணாநிதியிடம் அழைப்பிதழ் வழங்கினார் ஸ்டாலின்

முரசொலி பவள விழா: கருணாநிதியிடம் அழைப்பிதழ் வழங்கினார் ஸ்டாலின்
Published on

முரசொலி நாளிதழின் பவள விழா அழைப்பிதழை திமுக தலைவர் கருணாநிதிக்கு, அக்கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் வழங்கினார்.

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி பத்திரிக்கையின் 75 ஆம் நிறைவு ஆண்டை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் மாதம் பவள விழா நடைபெறுகிறது. பவளவிழாவையொட்டி, திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன், மு.க.ஸ்டாலின் ஆகியோர் திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் நேரில் சந்தித்து அழைப்பிதழை வழங்கினர். ஆகஸ்ட் 10 மற்றும் 11 ஆம் தேதியில் முரசொலி நாளிதழின் பவள விழா சென்னையில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com