லட்சத்தீவு நிர்வாக அதிகாரியை திரும்பப் பெறுக - முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

லட்சத்தீவு நிர்வாக அதிகாரியை திரும்பப் பெறுக - முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

லட்சத்தீவு நிர்வாக அதிகாரியை திரும்பப் பெறுக - முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
Published on

லட்சத்தீவு நிர்வாக அதிகாரியை மத்திய அரசு உடனே திரும்பப்பெற வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

லட்சத்தீவில் மதுபானங்களை அனுமதிப்பது, மாட்டிறைச்சிக்கான தடை, குண்டர்கள் சட்டம், நிலத்தின் உபயோகத்தில் மாற்றங்கள் போன்ற நிர்வாக அதிகாரியின் நடவடிக்கைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் மற்றும் எதிர்ப்புகள் கிளம்பிவருகிறது. இதற்கு கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில், இதனை மத்திய அரசு கவனித்து பரிசீலனை செய்துவருகிறது.

இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் லட்சத்தீவின் நிர்வாக அதிகாரியைத் திரும்பப் பெறுமாறு மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். அதில், நிர்வாக அதிகாரி பிரஃபுல் கோடா படேல் மக்கள் விரோத சட்டங்களை வலுக்கட்டாயமாக திணிக்கிறார். லட்சத்தீவில் வாழும் இஸ்லாமியர்களை அந்நியபப்டுத்த எடுக்கும் நடவடிக்கைகள் வேதனை அளிக்கிறது. பிரதமர் மோடி தலையிட்டு புதிய சட்டங்களை திரும்பப் பெறவேண்டும்; பன்முகத்தன்மையே நம் நாட்டின் பலம் என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com