திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அப்போலோ மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
நேற்று மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மருத்துவர்கள் சார்பில் நடத்தப்பட்ட அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டார். பின்னர், இரவு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு ஸ்டாலின் சென்றார். அங்கு அவருக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. இன்று ஸ்டாலின் வீடு திரும்புவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கருணாநிதி மறைவிற்கு பின் அண்மையில் திமுக தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.