\
பேரவையை உடனே கூட்டுங்கள்: ஸ்டாலின்

பேரவையை உடனே கூட்டுங்கள்: ஸ்டாலின்

பேரவையை உடனே கூட்டுங்கள்: ஸ்டாலின்
Published on: 

சட்டப் பேரவையை உடனடியாக கூட்ட வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சபாநாயகரிடம் மனு அளித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்திற்கு வந்த அவர், தமிழக சட்டப்பேரவையை உடனடியாக கூட்ட வலியுறுத்தி சபாநாயகரிடம் மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’சட்டப்பேரவையைக் கூட்டுவது பற்றி முதல்வரிடம் பேசிவிட்டு தெரிவிப்பதாக, சபாநாயகர் எங்களிடம் கூறினார். தமிழக அரசு நிர்வாகம் முற்றாக முடங்கி இருக்கிறது. விவசாயிகளின் போராட்டத்தை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை. மாநிலம் முழுவதும் நிலவும் குடிநீர் பிரச்னையை தீர்க்கவும் முன்வரவில்லை’ என்று தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com