\
பத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்களே  - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்களே - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்களே - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
Published on

முன்களப் பணியாளர்களுக்குரிய உரிமைகள், சலுகைகள் பத்திரிகையாளர்களுக்கும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார் மு.க.ஸ்டாலின். 

கொரோனாவுக்கு எதிரான போரில் பத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்களே என தமிழக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ள மு.க.ஸ்டாலின், ''மழை - வெயில் - பெருந்தொற்றிலும் உயிரைப் பணயம் வைத்து செய்தித்தாள்கள், காட்சி - ஒலி ஊடகங்களில் பணியாற்றி வருகின்ற ஊடகத் துறையினர் அனைவருமே தமிழகத்தில் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவர். முன்களப் பணியாளர்களுக்குரிய உரிமைகள் - சலுகைகள் அவர்களுக்கும் உரிய முறையில் வழங்கப்படும்'' என அறிவித்துள்ளார். 

வரும் 7-ம் தேதி தமிழக முதலைமைச்சராக பதவியேற்கவுள்ள நிலையில் மு.க.ஸ்டாலின் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். 
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com