\
”எம்.எல்.ஏ.வாக மாறியிருக்க வேண்டியவர்...” - மாதவராவ் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

”எம்.எல்.ஏ.வாக மாறியிருக்க வேண்டியவர்...” - மாதவராவ் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

”எம்.எல்.ஏ.வாக மாறியிருக்க வேண்டியவர்...” - மாதவராவ் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்
Published on

காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ஸ்ரீவில்லிப்புத்தூர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாதவராவ் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளானேன். அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


வாக்குப் பதிவு நிறைவடைந்துள்ள நிலையில் சட்டமன்ற உறுப்பினராக தமிழகச் சட்டமன்றத்திற்குள் நுழைந்திருக்க வேண்டிய அவரது திடீர் மறைவு அத்தொகுதி மக்களுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் பேரிழப்பு ஆகும். பொதுவாழ்வில் உள்ளவர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருந்து, தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com