தமிழ்நாடு
சசிகலா தேர்வு மக்கள் விருப்பத்திற்கு எதிரானது... ஸ்டாலின் விமர்சனம்
சசிகலா தேர்வு மக்கள் விருப்பத்திற்கு எதிரானது... ஸ்டாலின் விமர்சனம்
சசிகலாவை சட்டமன்றக் குழு தலைவராக அதிமுகவினர் தேர்வு செய்தது ஜெயலலிதாவின் விருப்பத்திற்கு விரோதமானது என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இது குறித்து திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க ஸ்டாலின், ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி பதவி விலகியபோதும், உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்த போதும் பன்னீர் செல்வத்தை தான் முதலமைச்சர் நியமித்தார். சசிகலாவிற்கு அவர் எந்த கட்சி பொறுப்பும், ஆட்சி பொறுப்பும் கொடுக்கவில்லை. எனவே சசிகலாவை அதிமுகவினர் தேர்வு செய்தது மக்கள் விருப்பத்திற்கும் ஜெயலலிதா எண்ணத்திற்கும் விரோதமானது என ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.