“லோக் ஆயுக்தா மசோதா ஒரு அட்டைக் கத்தி” - ஸ்டாலின் விமர்சனம்

“லோக் ஆயுக்தா மசோதா ஒரு அட்டைக் கத்தி” - ஸ்டாலின் விமர்சனம்
“லோக் ஆயுக்தா மசோதா ஒரு அட்டைக் கத்தி” - ஸ்டாலின் விமர்சனம்

லோக் ஆயுக்தா சட்ட மசோதா பல் இல்லாத பொக்கை வாயாக, வெட்டப் பயன்படாத அட்டைக் கத்தியாக இருக்கிறது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

லோக் ஆயுக்தா சட்ட மசோதா தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், லோக் ஆயுக்தா தலைவரை தேர்வு செய்வதில் முதலமைச்சர், பேரவைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் மட்டும் இடம்பெற்றிருப்பது வெளிப்படைத் தன்மைக்கு உதவாது என்று கூறியுள்ளார். மூன்று உறுப்பினர்களோடு உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர், துறைசார்ந்த அதிகாரி ஒருவரை சேர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். திமுக லோக் ஆயுக்தாவை எதிர்க்கவில்லை என்றும், அதிமுகவினர் தங்கள் மீது பழி சுமத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

லோக் ஆயுக்தா பல் இல்லாத பொக்‌கை வாயாக, வெட்டப் பயன்படாத அட்டைக் கத்தியாக இருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார். இது ஓட்டை வழியாக ஊழல் பெருச்சாளிகள் தப்பி ஓடி, நிர்வாக நேர்மை என்ற உயிருக்கே உலை வைக்கும் எனக் கூறியுள்ளார். அரசு ஒப்பந்தங்கள், ஆட்சியாளர்கள் நியமிக்கும் பணிகள் குறித்து லோக் ஆயுக்தா நடவடிக்கை எடுக்க முடியாது என்றால், ஊழலை எப்படி ஒழிக்க முடியும் என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com