மக்கள் கூட்டம் கூடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் - முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்

மக்கள் கூட்டம் கூடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் - முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
மக்கள் கூட்டம் கூடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் - முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்

பொதுமக்கள் அனைவரும் கூட்டம் கூடுவதை முற்றிலும் தவிர்க்கவேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவ நிபுணர்கள், சுகாதாரத்துறையினருடனான ஆலோசனைக்குப்பிறகு முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ’’கொரோனா, ஒமைக்ரான் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். எனவே வீட்டைவிட்டு வெளியே வரும்போது கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளை, உரிய கட்டுப்பாடுகளுடன் தொடரலாம். அனைத்து கடை, வணிக வளாகம், திரையரங்குகள் வழங்கிய நடைமுறையை கட்டாயம் பின்பற்ற வேண்டும். தடுப்பூசி முகாம்களுக்கு சென்று மக்கள் தவறாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்’’ என்று அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com