மருமகன் திமுக என்று அழைக்கலாமா?: வைகைசெல்வன் கேள்வி

மருமகன் திமுக என்று அழைக்கலாமா?: வைகைசெல்வன் கேள்வி
மருமகன் திமுக என்று அழைக்கலாமா?: வைகைசெல்வன் கேள்வி

திமுக-வை, செயல்படாத திமுக அல்லது மருமகன் திமுக என்று அழைக்கலாமா என்ற கேள்வியை மு.க.ஸ்டாலினிடமே விடுவதாக அதிமுக அம்மா அணியின் வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வைகைசெல்வன், திமுக-வின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசை பினாமி அரசு என்று தொடர்ந்து சொல்வி வருவது கண்டனத்திற்குரியது என்றார். திமுக-வில் செயல் தலைவர், செயல்படாத தலைவர் என்ற இரண்டு தலைவர்கள் இருக்கிறார்கள். அப்படியானால் திமுக-வை செயல்படாத திமுக என்று அழைக்கலாமா? அல்லது மருமகன் திமுக என்று அழைக்கலாமா...? இந்த கேள்வியை மு.க.ஸ்டாலினிடமே விடுவதாகவும் அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com