“5 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி பொய்த்துபோய் விட்டது” - ஸ்டாலின் ஆதங்கம்

“5 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி பொய்த்துபோய் விட்டது” - ஸ்டாலின் ஆதங்கம்
“5 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி பொய்த்துபோய் விட்டது” - ஸ்டாலின் ஆதங்கம்

மத்திய அரசுக்கு ஹிந்தியும், சமஸ்கிருதமும்தான் மொழியாக தெரிகிறது என மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில், மொழிபோர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் திமுக சார்பில் நடந்தது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “மத்திய அரசுக்கு ஹிந்தியும், சமஸ்கிருதமும்தான் மொழியாக தெரிகிறது. பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஹிந்தியை திணிக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது.

தமிழக முதல்வர் பழனிச்சாமி எந்தக் கொள்கையும், உணர்வும் இல்லாமல் தமிழக உரிமைகளை காவுகொடுக்க தயாராக உள்ளார். காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் திட்டம் வேண்டாம் என்று விவசாயிகள் போராடுகின்றனர். சட்டத்துறை அமைச்சர் மக்கள் விரும்பாத எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தாது என்று அறிவித்தார்.

ஆனால் காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க முன்வரவில்லை. மத்திய அரசு காவிரி டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைப்பதற்கு மக்கள் கருத்து தேவையில்லை என்று சட்டதிருத்தத்தை கொண்டு வருகிறது.

இதற்கு தமிழக முதல்வர் கடிதம் அனுப்புகிறார். அந்தக் கடிதத்தை பிரதமர் பிரித்துகூட பார்க்கமாட்டார். ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி திமுக சார்பில் வரும் 28ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர், தான் உண்டு தான் கொள்ளை உண்டு என்று ஆட்சி நடத்திகொண்டு இருக்கிறார். மக்களை பற்றி அவருக்கு கவலைகிடையாது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி பொய்த்துபோய் உள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்படவில்லை. ஆறு, வாய்க்கால்கள் தூர்வாரப்படவில்லை” என்று குற்றஞ்சாட்டினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com