தமிழ்நாடு
சூழலால் செயல் தலைவராகியுள்ளேன்.. மு.க.ஸ்டாலின் உருக்கம்
சூழலால் செயல் தலைவராகியுள்ளேன்.. மு.க.ஸ்டாலின் உருக்கம்
திமுகவின் செயல்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலின் சூழ்நிலை காரணமாகவே அந்த பதவியை ஏற்றுக்கொண்டதாக உணர்ச்சி பொங்கக் கூறியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து பொதுக்குழுவில் பேசிய மு.க.ஸ்டாலின், சூழ்நிலை காரணமாகவே செயல் தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டுள்ளதாக உணர்ச்சி பொங்க தெரிவித்தார்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு உறுதுணையாகவும், பொதுச்செயலாளர் அன்பழகன், முதன்மைச் செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளின் வழிகாட்டுதலுடன் கட்சியை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்லவிருப்பதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார். கட்சியில் தான் வகித்த அனைத்து பதவிகளுக்கும் தேர்தல் மூலமே தேர்வு செய்யப்பட்டதாகவும் மு.க.ஸ்டாலின் கூறினார்.