\
69வது பிறந்தநாளைக் கொண்டாடும் விஜயகாந்த் - தமிழக அரசியல் தலைவர்கள் வாழ்த்து

69வது பிறந்தநாளைக் கொண்டாடும் விஜயகாந்த் - தமிழக அரசியல் தலைவர்கள் வாழ்த்து

69வது பிறந்தநாளைக் கொண்டாடும் விஜயகாந்த் - தமிழக அரசியல் தலைவர்கள் வாழ்த்து
Published on

இன்று தனது 69வது பிறந்தநாளைக் கொண்டாடும் நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ், கமல்ஹாசன் மற்றும் கனிமொழி எம்.பி ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்திருக்கின்றனர். 

முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’தே.மு.தி.க. நிறுவனரும் தமிழ் மக்களின் அன்புக்குரிய கதாநாயகருமான நண்பர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நீண்ட நாட்கள் உடல்நலத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழ அவரது பிறந்தநாளில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றுக் குறிப்பிட்டுள்ளார். 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், ’’எளியோருக்குப் பாதிப்பு என்றால் தன் வரம்பில் இயன்றதை அதிரடியாகவும் உடனடியாகவும் செய்து துயர்துடைக்கும் மனம் வாய்ந்த நண்பர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்’’ என விஜயகாந்துக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.

அவர்களுக்கு என்னுடைய பிறந்த நாள் நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.

அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், ’’இன்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டிருக்கும் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் நிறுவனர் மற்றும் பொதுச் செயலாளர் "கேப்டன்" திரு.விஜயகாந்த்’’க்கு வாழ்த்துகள் என ட்வீட் செய்திருக்கிறார்.

நாடாளுமன்ற எம்.பி கனிமொழியும் விஜயகாந்துக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com