திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்துக்கு முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி வந்தார்.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை நலிவடைந்துள்ளது. இது குறித்து காவேரி மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டது. அதில், திமுக தலைவர் கருணாநிதிக்கு சிறுநீரக பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றின் காரணமாக காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. கருணாநிதியின் உடல்நலத்தில் வயது காரணமாக நலிவு ஏற்பட்டுள்ளது என்றும் கருணாநிதியை 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய குழு கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டிருந்தது.
வீட்டிலேயே அதற்கான மருத்துவ வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கருணாநிதி இல்லம் இருக்கும் கோபாலபுரத்துக்கு விரைந்து மு.க. ஸ்டாலினிடம் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தனர். மேலும் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் கருணாநிதியின் மகனும் மத்திய முன்னாள் அமைச்சருமான மு.க. அழகிரி அவர் வீட்டுக்கு வந்துள்ளார்.