முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு அவரது சகோதரர் மு.க அழகிரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க ஸ்டாலின் நிச்சயம் நல்லாட்சி தருவார் எனவும், முதலமைச்சராகவுள்ள மு.க ஸ்டாலினை பார்த்து பெருமைப்படுகிறேன் எனவும் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். ’அண்ணன் என்ற முறையில் எனது தம்பிக்கு வாழ்த்துகள்’ என்று மு.க அழகிரி கூறியுள்ளார்.