\
கருணாநிதி பிறந்தநாள்: மரியாதை செலுத்திய மு.க.அழகிரி

கருணாநிதி பிறந்தநாள்: மரியாதை செலுத்திய மு.க.அழகிரி

கருணாநிதி பிறந்தநாள்: மரியாதை செலுத்திய மு.க.அழகிரி
Published on: 

தன் தந்தையின் 98-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் கருணாநிதி படத்திற்கு மு.க.அழகிரி மரியாதை செலுத்தினார்.

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 98-வது பிறந்தநாள் இன்று அக்கட்சியினரால் தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு நலத்திட்ட உதவிகளை திமுக தொண்டர்கள் செய்து வருகின்றனர். 

இந்த நிலையில் இன்று காலை திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், கருணாநிதியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் கோபாலபுரம், முரசொலி அலுவலகம் சிஐடி காலனி இல்லம் போன்ற இடங்களுக்கும் சென்று வந்தார்.

இந்த நிலையில் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்திற்கு அவரது மகன் மு.க.அழகிரி நேரடியாக சென்று அவரது புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். அதுமட்டுமல்லாமல் தனது தாயாரையும் சந்தித்து ஆசி பெற்றார் மு.க.அழகிரி.

- சுபாஷ் பிரபு

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com