\
திரண்ட தொண்டர்கள்... மு.க. அழகிரியின் ஆலோசனை தொடங்கியது!

திரண்ட தொண்டர்கள்... மு.க. அழகிரியின் ஆலோசனை தொடங்கியது!

திரண்ட தொண்டர்கள்... மு.க. அழகிரியின் ஆலோசனை தொடங்கியது!
Published on

மு.க.அழகிரி தனது ஆதரவாளர்கள் முன்னிலையில், தற்போது பேசத் தொடங்கியிருக்கிறார்.

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரி தனது அரசியல் நிலைப்பாடு தொடர்பாக ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்த இருப்பதாக அறிவித்தார். அதன்படி, இன்று மதுரை இல்லத்தில் இருந்து 12 கிமீ தொலைவில் பாண்டிகோவில் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்தன.

அங்கு காவல்துறை சார்பில் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. இந்நிலையில் சற்றுநேரம் முன்பு தனது இல்லத்தில் இருந்து புறப்பட்ட அழகிரி தனியார் மண்டபம் வந்தடைந்தார். அவரை மண்டபத்தில் கூடியிருந்த அவரது தொண்டர்கள் உற்சாகத்தோடு அவரை வரவேற்றனர். இந்நிலையில் தற்போது அவர் பேசத் தொடங்கியிருக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com