தமிழ்நாடு
சென்னை கோபாலபுரம் இல்லத்தில் மு.க.அழகிரி - தாயாருடன் சந்திப்பு
சென்னை கோபாலபுரம் இல்லத்தில் மு.க.அழகிரி - தாயாருடன் சந்திப்பு
தாயாரின் உடல்நலத்தை விசாரிக்க கோபாலபுரத்தில் உள்ள இல்லத்திற்கு கருணாநிதியின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி வந்துள்ளார்.
சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்திற்கு கருணாநிதியின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி வந்துள்ளார். கோபாலபுரம் இல்லத்திற்கு வந்த மு.க.அழகிரி தயாளு அம்மாளின் உடல்நலத்தை விசாரித்தார்.
முன்னதாக, சட்டப்பேரவை தேர்தலில் தனது பங்கு இருக்கும் என மு.க.அழகிரி கூறியிருந்தார். அத்துடன் மு.க.அழகிரி பாஜகவில் இணையப் போவதாகவும், ரஜினியுடன் இணையப்போவதாவும் பல்வேறு தகவல்கள் வெளிவந்தன. ஆனால், அவற்றையெல்லாம் போகிறபோக்கில் மறுத்துவிட்டு சென்றார் அழகிரி. இத்தகைய சூழலில்தான் இன்று அவர் சென்னை கோபாலபுரம் இல்லத்திற்கு வருகை தந்து தனது தாயாரை சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.