\
“உழைப்பினால் உயரம் தொட்டவர் கே.வி.ஆனந்த்” - மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி

“உழைப்பினால் உயரம் தொட்டவர் கே.வி.ஆனந்த்” - மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி

“உழைப்பினால் உயரம் தொட்டவர் கே.வி.ஆனந்த்” - மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி
Published on
திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான கே.வி. ஆனந்த் மறைவையொட்டி  மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ''திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். நிழற்படக் கலைஞராக வாழ்க்கையைத் தொடங்கி, ஒளிப்பதிவாளர், இயக்குநர் என தன் உழைப்பினால் உயரம் தொட்டவர்.
அயன், கோ, மாற்றான், கவண் உட்படப் பல வெற்றிகரமான திரைப்படங்களை இயக்கிய சிறந்த படைப்பாளியான அவர், தேசிய விருது பெற்ற பெருமைக்குரியவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.''
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com