“ஸ்டாலினை முதல்வராக்குவோம்...” அதிமுக ஆர்ப்பாட்டத்தில் உளறிய திண்டுக்கல் சீனிவாசன்! #Video

தமிழ்நாட்டில் மீண்டும் ஸ்டாலினை முதல்வராக்குவோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உளறியதால் அதிமுக ஆர்ப்பாட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் நாகல்நகர் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார். அப்போது திண்டுக்கல் சீனிவாசன் பேசிய போது, “மீண்டும் ஸ்டாலினை முதல்வராக்குவோம்” என்று பேசினார்.

பின்னர் சுதாரித்தக் கொண்ட அவர், எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவோம் என்று பேசினார். இதனால் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தொண்டர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com