\
தவறுதலாக வெடித்த நாட்டுத் துப்பாக்கி - முயல் வேட்டைக்குச் சென்றவர் உயிரிழப்பு

தவறுதலாக வெடித்த நாட்டுத் துப்பாக்கி - முயல் வேட்டைக்குச் சென்றவர் உயிரிழப்பு

தவறுதலாக வெடித்த நாட்டுத் துப்பாக்கி - முயல் வேட்டைக்குச் சென்றவர் உயிரிழப்பு
Published on

நாமக்கல் மாவட்டத்தில் முயல் வேட்டைக்குச் சென்றபோது தவறுதலாக நாட்டுத் துப்பாக்கி வெடித்ததில் சக்திவேல் என்பவர் உயிரிழந்தார்.

நாமக்கல் மாவட்டம் வலசு கொமாரபாளையத்தைச் சேர்ந்த சக்திவேல் (24) மங்களபுரத்தை சேர்ந்த தோனி (17) ஊத்துக்குளிகாடு பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் உள்ளிட்ட மூன்று பேரும் இருசக்கர வாகனத்தில் ராசிபுரம் அருகே உள்ள சிங்கிலியன் கோம்பை மலை பகுதிக்கு  இரவு முயல் வேட்டைக்குச் சென்றுள்ளனர். அப்போது தவறுதலாக நாட்டுத் துப்பாக்கி வெடித்ததில் சக்திவேல் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதில் சக்திவேல் சம்பவ இடத்திலேயே பலியானர். பின்னர் தோனி மற்றும் செந்தில்குமார் சக்திவேல் சடலத்தை இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்று வீட்டில் போட்டுவிட்டு தப்பித்துள்ளனர்.

 தகவல் அறிந்து வந்த மங்களபுரம் காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துமனைக்கு அனுப்பிவைத்தனர். அதன் பின்னர் தோனி மற்றும் செந்தில்குமார்  ஆகிய 2 பேரையும் கைது செய்த காவல்துறையினர் நாட்டுத் துப்பாக்கிகளை பறிமுதல் செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com