திருநங்கைகளின் முப்பெரும் விழா 2022 - "மிஸ் சென்னை திருநங்கை"-கான அழகிப்போட்டி!!

திருநங்கைகளின் முப்பெரும் விழா 2022 - "மிஸ் சென்னை திருநங்கை"-கான அழகிப்போட்டி!!
திருநங்கைகளின் முப்பெரும் விழா 2022 - "மிஸ் சென்னை திருநங்கை"-கான அழகிப்போட்டி!!
திருநங்கைகளின் முப்பெரும் விழா 2022 நிகழ்ச்சியில் பங்கேற்க அழகிப்போட்டிக்கான "மிஸ் சென்னை திருநங்கை" தேர்வு நடைபெற்றது. 
'திருநங்கைகளின் முப்பெரும் விழா 2022' அக்டோபர் 15 ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறுவதை முன்னிட்டு, அந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியான "மிஸ் சென்னை திருநங்கை" அழகிப்போட்டிக்கான தேர்வு, சென்னை கீழ்ப்பாக்கம் டான்பாஸ்கோ கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. 
மூன்று நாட்கள் நடைபெறும் திருநங்கைகளின் முப்பெரும் விழாவிற்கு முன்னதாக அக்டோபர் 13 ஆம் தேதி, கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் திருநங்கைகளுக்கான முக்கியத்துவம் குறித்த நிகழ்ச்சி, அக்டோபர் 14 ஆம் தேதி திருநங்கைகளுக்கான உடலின மாற்றத்திற்கான மருத்துவ சிகிச்சைகள் மற்றும் அதற்கான உதவிகள் குறித்த கருத்தரங்கம், அக்டோபர் 15ஆம் தேதி, திருநங்கைகளின் முப்பெரும் விழா 2022 நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ளது. 
’’மிஸ் சென்னை திருநங்கை’’ நிகழ்ச்சிக்கான தேர்வில் 22 திருநங்கைகள் கலந்து கொண்டு, புகழ்பெற்ற பேஷன் கலைஞர்கள் முன்பு அணிவகுத்தனர். இதில் இருந்து 12 பேர், வரும் 15 ஆம் தேதி நடைபெறவுள்ள "மிஸ் சென்னை திருநங்கை" இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மிஸ் சென்னை திருநங்கை இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் மூன்று திருநங்கைகளுக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழும், மிஸ் சென்னை திருநங்கை பட்டமும் வழங்கப்படும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com