எய்ம்ஸ் குறித்து தவறான தகவல் - ஜெபி.நட்டா மீது காவல் நிலையத்தில் காங்கிரஸ் புகார்.

எய்ம்ஸ் குறித்து தவறான தகவல் - ஜெபி.நட்டா மீது காவல் நிலையத்தில் காங்கிரஸ் புகார்.

எய்ம்ஸ் குறித்து தவறான தகவல் - ஜெபி.நட்டா மீது காவல் நிலையத்தில் காங்கிரஸ் புகார்.
Published on

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து தவறான கருத்து தெரிவித்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.

பாஜக தேசிய தலைவர் ஜேபி.நட்டா கடந்த சில தினங்கள் முன்பு மதுரையில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்தது எனக் கூறியதாக விமர்சனம் எழுந்தது.

இந்த நிலையில் 95 சதவீதம் நிறைவடைந்த எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே என்று பதாகைகளுடன் எம்பிகள் மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன் ஆகியோர் பார்வையிட்டனர். இதையடுத்து காங்கிரஸ் கட்சி தகவல் அறியும் உரிமை பிரிவு தலைவர் வக்கீல் கனகராஜ், தகவல் அறியும் உரிமை சட்டப்பிரிவு பொதுச் செயலாளர் சக்திவேல் ஆகியோர் ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து தவறான கருத்து பரப்பியதாக பாஜக தேசிய தலைவர் ஜேபி. நட்டா மீது புகார் கொடுத்தனர்.

இதைத் தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து தகவல்களை சுகாதாரத்துறை மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை அதிகாரிகள் தான் தெரிவிக்க வேண்டும். ஆனால், பாஜகவில் தேசிய தலைவர் என்பதால் எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து தவறான கருத்துக்களை பரப்பக் கூடாது என காங்கிரஸ் கட்சி தகவல் அறியும் உரிமை பிரிவு தலைவர் கனகராஜ், கூறினார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com