\
உயிரிழந்த சிறுவன்
உயிரிழந்த சிறுவன்pt web

சென்னை: புடவை ஊஞ்சலில் சுற்றி, சுற்றி விளையாடிய சிறுவன்.. கழுத்து இறுகி பலியான சோகம்!

வீட்டில் புடவை ஊஞ்சலில் விளையாடிய 12 வயது சிறுவன் கழுத்து இறுகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Published on

சென்னை கண்ணகி நகர், 2 அடுக்கு, 54 வது குறுக்கு தெருவை சேர்ந்தவர்கள் வேலாயுதம் - மகாலட்சுமி தம்பதி. இவர்களின் இளைய மகன் செல்வா(12), தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். அவர்களது வீட்டில் குழந்தைகள் உறங்க கட்டப்படும் தொட்டில் போன்ற ஊஞ்சலை புடவையில் கட்டி தொங்க வைத்துள்ளனர்.

வீட்டில் தந்தை வேலாயுதம் கண்ணிற்கு மருந்து விட்டுக் கொண்டு படுத்துக் கொண்டிருந்த நிலையில், தாய் தனது மூத்த மகனை வெளியில் அனுப்பி விட்டு வீடு திரும்புவதற்கு இடைப்பட்ட நேரத்தில், கட்டிவைக்கப்பட்டிருந்த புடவை ஊஞ்சலில் சிறுவன் செல்வா சுற்றி, சுற்றி விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக கழுத்தில் சிக்கி கொண்டுள்ளது. சுயநினைவின்றி இருப்பதை கண்ட சிறுவனின் உறவினர் சிறுவனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று விசாரித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவலறிந்து வந்த கண்ணகி நகர் காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com